Thursday, January 21, 2010

FOOD,Inc. கசப்பான உண்மை

                                                                 -மயில்ராவணன்
நேற்று ஒரு documentary படம் பார்த்தேன். அமெரிக்காவில் உள்ள ஒரு அழகான வயல்வெளியில் தொடங்கி பின்ணனியில் குரல் ‘நாம் உணவு உட்கொள்ளும் முறைகளில் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இன்னமும் பார்த்தால் உணவுப் பொட்டலங்களிலும் மற்ற பொருட்களிலும் பார்த்தோமானால் பழைய படங்களே இருக்கும்.  உதாரனம்-விவசாயி, பச்சை பசேலனெ இருக்கும் விளைநிலங்கள்.

அப்படியே அக்காட்சி department storeக்குள் நுழைகிறது. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மளிகைச் சாமான்கள்,காய்கறிகள்,இறைச்சி வகைகள் என அத்தனையும் மிக நேர்த்தியாக பைகளில் அடைத்து அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. பிண்ணனியில் குரல் ஒளிக்கத் தொடங்குகிறது,


அமெரிக்க கடைகளில் குறைந்தது 47000 பொருட்கள் உள்ளன.இங்கு பருவகாலமேக கிடையாது, வருடம் 365 நாட்களும் தக்காளி கிடைக்கும். காய்களாக இருக்கும்போதே பறிக்கப்பட்டு எத்திலீன் வாயு பாய்ச்சி கனிய வைக்கப்பட்டவை. அவை தக்காளி மாதிரி ஆனால் தக்காளி அல்ல, இறைச்சியும் வேறொருவகைத் தயாரிப்புதான். ‘நீங்கள் உன்ணும் உணவைப் பற்றி எப்போதாவாதது யோசித்து பார்த்தது உண்டா? அவ்வுணவு எங்கிருந்து வ்ருகிறது எனத் தெரியுமா? யார் அதை உற்பத்தி செய்கிறார்கள்?எவ்வாறு? என யோசித்தது உண்டா? இப்படி நிறையக் கேள்விகள்..

அப்புறம் உண்மைகளை ஆராய்ந்துப் பார்த்தால் இவையனைத்துமே நான்கு அல்லது ஐந்து தயாரிப்பாளர்கள் அல்லது நிறுவனங்களிலிருந்தே வருகின்றன. விவசாயப் பண்ணைகள், விளைநிலங்கள் போன்றவற்றில் உற்பத்தி என்ற நிலை மாறி அனைத்தும் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரிய பண்னாட்டு நிறுவனங்கள் சில இதில் ஈடுபட்டு விலங்குகள் மற்றும் மனிதர்களை மிகக் கேவலமாக நடத்தி இம்மாதிரியான மிகக்கொடியப் பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. காட்சிகள் அப்பிடியே இவையனைத்தையும் படம் பிடித்துக் காண்பிக்கின்றன. சுகாதாரமற்ற பராமரிப்பற்ற இருட்டு நிறைந்த கோழிப் பண்னைகள், மாட்டுக் கொட்டகைகள், பன்றித் தொழுவங்கள் என அனைத்தும் உள்ளது உள்ளபடியேக் காண்பிக்கப்படுகின்றன...புள்ளிவிவரங்களுடன்.

திருப்பூர் பனியன் கம்பெனியிலோ அல்லது ஹ்யுண்டாய் கார் கம்பெனியிலோ இவ்வளவு இயந்திரங்கள் இருக்குமா என்று சந்தேகம் வரும் இப்படத்தில் காட்டப்படும் கோழி, மாட்டிறைச்சி தயாரிக்கும் கம்பெனிகளைக் காட்டும்
பொழுது. இந்தப் படத்தில் நிறைய துறைசார் வள்ளுனர்கள், உற்பத்தியாளர்கள், நுகர்வோரின் பேட்டி வருகின்றது.


இறுதியாக சில வரிகள்: அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடலான ‘This land is you land' பாடல் பிண்ணனியில் ஒலிக்க..


  ‘You can vote to change this system'
   'buy from companies that treat 
     workers,
             animals,
                     and the environment
                                        with respect.'
    'When you go to the supermarket,
          Choose foods that are in season, 
          Buy foods that are organic,
 Know what is in your food.'
      Read labels.  
     The average meal travels 1500 miles from the
     farm to the supermarket.
                   Buy foods that are grown locally.
                   Shop at farmers' markets.
                   Plant a garden.(Even a small one).
                   Reintorduce kevins law.
          You can change the world in every bite.
                      Hungry for change.               
                        goto
                   takepart.com/foodinc
வரிகள் வருகின்றன.


வழமைபோல் இப்படத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே
இப்படத்தின் டிரைலர் இங்கே
kevin's law பற்றிய விவரம் இங்கே
டிஸ்கி:
      இப்படத்தின் இயக்குனர் ”Robert Kenner” மற்றும் அவரது குழு பாராட்டுக்குறியது. பெரும்பாலும் சோளம் அனைத்து உணவுப் பொருட்களில் கலக்கப்படுவது, எலிக்காய்ச்சல் உண்டாக்கும் கிருமிகள் போன்ற நிறைய விசயங்கள் உள்ள இப்படம் அனைவரும் பார்க்கவேண்டியப் படமல்ல பாடம்.

24 comments:

Paleo God said...

மிக்க நன்றி மயிலு.. பாத்துடறேன். இந்த மாதிரி டாக்குமெண்ட்ரி க்ண்டிப்பா பதிவு பண்ணுங்க.

-ஷங்கர்.

Senthil said...

mayil ,
unmaiylae ellorum paarka vendiya padam..

நிலாரசிகன் said...

மிகவும் பயனுள்ள இடுகை. அமெரிக்கா டப்பா உணவுகளில்தான் வாழ்கிறது. இந்த ஆவணப்படத்தை தரவிறக்கம் செய்ய இயலுமா? ஏதேனும் சுட்டி இருந்தால் தாருங்கள்.

கருந்தேள் கண்ணாயிரம் said...

ரொம்ப உண்மை . .நாம் உண்ணும் பொருட்கள் எப்படித் தயாரிக்கப்பட்டன என்று தெரிந்துகொண்டால், அத்தோடு அதனை நாம் உண்பதை நிறுத்திவிடுவோம். இத்தகைய மோசடிகளைத் தோலுரித்துக் காட்டக்கூடிய இம்மாதிரிப் படங்கள் அவசியம் தேவை. வாழ்த்துக்கள். (நம்ம லெப்ட் சைடுல பார்த்தீங்களா பாஸு) . . . :-)

shortfilmindia.com said...

படத்தை பார்க்கவில்லை பார்த்துவிட்டு சொல்கிறேன். டிவிடி இருந்தால் தரவும்
கேபிள் சங்கர்

எறும்பு said...

//FOOD,Inc. கசப்பான உண்மை//

யோசிக்க வேண்டிய விசயம்தான்...

பாலா said...

என்னோட 2009 டாப் 10-ல் இதுவும் ஒரு படம். இன்னைக்கு பப்ளிஷ் பண்ணலாம்னு நினைச்சேன்! :)

மரா said...

@ மீன்துள்ளி
நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்.

@ நிலாரசிகன்
நன்றி. அமெரிக்கா மட்டுமா இங்கேயே எம்புட்டு பிஸ்ஸா,பர்கர் கடை..மெயில்ல தாட்டி உட்றுக்கேன் படத்த..என்சாய்..

@ கருந்தேள் கண்ணாயிரம்
//நம்ம லெப்ட் சைடுல பார்த்தீங்களா பாஸு//
அரமாலுமே ரொம்ப சந்தோசமா இருக்கு. நன்றி பாஸ்.

@ கேபிள்
நன்றி வருகைக்கு.சைதை டவுனுக்கு வரும்போது கொண்டு வாரேன்.

@ எறும்பு
வாங்க.வாங்க.யோசிச்சிக்கிடே படத்தையும் பாருங்க..அனுப்பி வைக்கிறேன்.

Paleo God said...

மீ த பர்ஸ்ட் யா வேர் ஈஸ் மை கமன்ட்?? ஃபாலோஅப் மட்டும் கரீட்டா வருது..:(

மரா said...

@ பலா பட்டறை
அண்ணே மன்னிச்சிக்குங்க. இத கவனிக்கல..நன்றி

மரா said...

@ ஹாலிவுட் பாலா
நீங்க சொல்லி தான் இதையும் ‘The Cove'ம் பார்த்தேன்.நீங்களும் போடுங்க தல.நல்ல படங்கள்( documentary type) பற்றி ஒன்றுக்கும் மேற்பட்டோர் எழுதுவது நல்லதே. வருகைக்கு நன்றி.

geethappriyan said...

மிகவும் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பா
இதையும் தர்விறக்கி விடுகிறேன்.பகிர்வுக்கு நன்றி

geethappriyan said...

மிகவும் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பா
இதையும் தர்விறக்கி விடுகிறேன்.பகிர்வுக்கு நன்றி

அண்ணாமலையான் said...

அடடே ஒரு அருமையான பதிவு, jst nw read, தாமதத்திற்கு மன்னிக்கவும்.. வாழ்த்துக்கள்..

மரா said...

@ கார்த்திகேயன்

ரொம்ப நன்றி. அடிக்கடி வாங்க....

RAMAYYA said...

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா வந்து நாமும் இதே போல் நெடுங்காலம்
பின்னோக்கி நடந்து மெல்ல புரிந்து கொள்வோம். நாம் எவருக்கும் இளைததவர்
அல்ல. நாமும் supermarket நிறுவனங்கள் துவங்கி நம் வீட்டு தோட்டத்தில் வளர்க்க முடியும் காய்
கறிகளை பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு வந்து உண்டு வாழ்வோம்

மரா said...

@ செர்வின்
வாங்க பாஸ்.ரொம்ப உணர்ச்சிவசப்படுறிங்க. வீட்ல ஒரு தோட்டத்தைப் போடுங்கண்ணே..நன்றி.

மரா said...

@ அண்ணாமலையான்
நன்றி சார் உங்க வருகைக்கும், கருத்துக்கும்.

DR said...

கண்டிப்பா பாத்துடலாம். தரவிறக்கம் செய்ய சுட்டி இருந்தால் யாராவது இணைக்கவும்... நன்றி...

மரா said...

@ Dinesh

வருகைக்கு நன்றி.

சில்க் சதிஷ் said...

http://wwvv.niceboard.net/Food-inc-2009-h68.htm


Link for The Movie.

Indian Friends try mediafire Link for BSNL user

Very fast download

DR said...

நண்பர் திரு சதீஷ் குமாருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தரவிறக்கம் செய்ய சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...

மரா said...

@ Dinesh

உங்க மெயில் ஐடி இல்லாத்தால் நான் அனுப்பவில்லை. நன்றி.

Unknown said...

KFC, McDonalds போன்ற துரித உணவகங்களில் சாப்பிடுவதை "பேசன்" என்று நெனைக்கும் நம் நாட்டினர் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இதை பார்த்த பிறகு அது "பேசன்" இல்லை "பாய்சன்" என்று உணர்ந்து கொள்வர்கள். சமிபத்தில் சன் டிவியில் KFC விளம்பரம் பார்த்தேன், வருத்த கோழிக்கறி 12 வகை மூலிகை(???) போட்டு செய்திருக்கிறார்களாம்! எந்த மூலிகைகளும் "டீப் பிரை" பண்ணினால் விஷமாக தான் மாறும்.