-மயில்ரவாணன்
'Mountain Patrol'-kekexili இயற்கைய நேசிக்கும் மக்கள், இயற்கைக் கொடைகள் எவ்வாறெல்லாம் கயவர்களால் கொள்ளையடிக்கப்
படுகின்றன போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுவோர் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்.
ஒருவன் அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறான் தன்னுடைய ஜீப்பில்.திடீரென்று ஒரு பெரியவர் கண்ணாடிக் கதவைத் தட்டி எழுப்புகிறார்.முன்னால் 5, 6 பேர் கையில் துப்பாக்கிகளுடன் நிற்கின்றனர். அடுத்த காட்சி, அந்த நபர் வேட்டைக்காரர்களின் ஜீப்பில் கொண்டுசெல்லப் படுகிறான். போகும் வழியில் மான்களைச் சுட்டு அதன் தோலை அங்கேயே உறிக்கின்றனர். சிக்கியவனின் நெஞ்சம் பதைக்கிறது,கைகள் கட்டப்பட்ட நிலையிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறான், அடுத்த விநாடி அவன் ’ரிதாயின்’ ஆளா என விசாரித்து சுட்டுக்கொள்ளப் படுகிறான்.
கெகிஜிலி kekexili(அழகிய மலைகளும்,பெண்களும்-திபெத்திய மொழியில்) - சீனாவின் பழமையான, அருமையான மலைப்பகுதி.கடல்மட்டத்திலிருந்து சுமார் 4700 மீட்டர் உயரம் கொண்டது.திபெத்திய மலைப்பிரதேசங்களில் வாழக்கூடிய ஒருவகை மான்களை அதன் விலைமதிப்பற்ற தோலுக்காக வேட்டையாடுகின்றனர் அனுமதியின்றி,அத்துமீறும் வேட்டைக்காரர்கள். இவர்களை தடுப்பதற்காக வேண்டி 1993ல்'volunteers' சேர்ந்து ஒரு பாதுகாப்பு படையை உருவாக்கு கின்றனர்.அதற்கு ஓய்வுபெற்ற திபெத்திய ராணுவத் தளபதி ’ரிதாய்’ தலைமை தாங்குகிறார்.
1996ல் இப்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவன் சுட்டுக் கொல்லப்படுகின்றான். அதன் நேரடி ரிப்போர்ட் பணிக்காக வேண்டி பெய்ஜிங்கிலிருந்து ஒரு பத்திரிக்கை தனது நிருபரை அனுப்புகிறது. அவனுடையப் பார்வையில் சொல்லப் படுவதுபோல் செல்கிறது இப்படம்.
இரவு விருந்து முடிந்து மறுநாள் அதிகாலை பயணம் தொடங்குகிறது.நம் மனமும் கூடவே பயணிக்கிறது.நாட்கள் 1,2,3 என நகர்கின்றது. ஒரு காட்சியில், ஒரு கூட்டமே இப்பாதுகாப்புப் படையினரிடம் மாட்டிக் கொள்ளும். அதில் ஒருவன் காட்டும் மணற்குழியில் நூற்றுக்கணக்கான மான்தோல்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கும். பின் அதைப் பாதுகாப்புப் படையினர் எடுத்து உலர்த்துவர். இப்படையின் வீரர்கள் பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர். நிருபருக்கும் ரிதாய்க்கும் நடக்கும் உரையாடல், பனிப்போர்,மணல் புதைக்குழி போன்ற பலக் காட்சிகள் நம் நெஞ்சைப் பிழியும்.
மா ஜான்லின் யார்? அந்த வேட்டைக்காரக் கும்பலின் தலைவன் யார்? ரிதாய் அவனைச் சந்தித்தானா? திபெத்தியர்களின் சவப் பழக்கவழக்கங்கள் என்ன? சீன அரசு கெகிஜிலியை அரசுக் காப்பு வளமாக(Natural Reserve)ஆக ஆக்கியதா? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் விடை திரைப்படத்தில்.
வழமைபோல் இப்படத்தின் டிரைலர்
இங்கே
வழமைபோல் இப்படத்தின் மேலதிக விவரம் :
இங்கே
டிஸ்கி:
இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ’சுவான் லூ ’ ரொம்ப மெனக்கெட்டு எழுதி இயக்கியிருக்கிறார். பல்வேறு விருதுகளைப் பெற்றாலும், படத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறியது. மான் வேட்டை தடை செய்யப்பட்டது.மான்களின் எண்ணிக்கையும் இப்போது கணிசமாக உயர்ந்துள்ளது.கெகிஜிலியும் natural reserveஆக அறிவிக்கப்பட்டது.
17 comments:
கெகிஜிலி kekexili(அழகிய மலைகளும்,பெண்களும்-திபெத்திய மொழியில்)..
வார்த்தையும்-அர்த்தமும் கவிதைமாதிரியே இருக்கு.::))
பகிர்வுக்கு நன்றி மயில்::)
இந்தப் படத்த கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கும் மேல தேடிக்கினு இருக்கேன் . . கிடைக்கவே இல்ல. . டி வி டி . . இப்போதைக்கி டவுன்லோட் பண்ணவும் முடியாது . . நெக்ஸ்ட் மன்த் டவுன்லோட் பண்ணலாம் . . பண்ணவுடனே பாக்குறேன் . . :-)
தல.. தேங்க்ஸுங்க. படம்.. நெட்ஃப்ளிக்ஸ் இன்ஸ்டண்ட் ப்ளே-வில் இருக்கு. இப்ப.. காலை 1.30.
நாளைக்கு சாயங்காலம் முதல் வேலை... இதுதான்!
இந்த மாதிரிப் படம் பார்க்கும் போது... ரொம்ப கஷ்டமாகிடும். அதுதான் பிரச்சனை.
வேட்டைக்காரன் விமர்சனமோன்னு நினைச்சிட்டேன் :))
நல்லது நடந்தா சந்தோஷம்தான்
@ பலா பட்டறை
நன்றி வருகைக்கு. படம் குழந்தைகளோடு பாருங்க.
இயற்கைப் பற்றிய விசயங்களை இப்பவே விதையுங்கள்
நண்பா..
@ கருந்தேள் கண்ணாயிரம்
உங்க கோயம்புத்தூர் கடைக்காரர்கிட்ட சொல்லி வைங்க பாஸ்.கிடைக்கும். ரொம்ப சந்தோசம், வெரசா வந்து படிச்சதுக்கு..
@ ஹாலிவுட் பாலா
மனசுக் கஷ்டத்துக்கு மருந்தா இல்ல அக்கரைச்சீமையிலே? அவசியம் பாருங்க தல.
@ சங்கர்
ஏன் இந்த கொலைவெறி சகா....நான் அவனில்லை. :) நன்றி.
@ அண்ணாமலையான்
அங்க நடந்துருச்சி. இங்கேதான் இன்னும் நிறைய மாற்றங்கள் வரவேண்டும். கனவு காணுங்கள்!!
நல்லா எழுதி இருக்கிங்க.. வாழ்த்துக்கள்...
நல்லதொரு பகிர்வு நண்பரே..
@ ஜாக்கி சேகர்
புத்தகச் சந்தைல(தங்கர்பச்சான் அப்பிடிதான் சொல்ல சொன்னார் :) ) பாத்தது.ரொம்ப சந்தோசம். ஷூட்டிங் இல்லாத்போதெல்லாம் வாங்க.நன்றி.
@ கனவுகளின் காதலன்
நன்றி நண்பா.
நான் அதிகமாக உலகசினிமாக்கள் பார்த்ததில்லை.பகிர்வுக்கு நன்றி சுவாமி
@ தண்டோரா...
நம்பிட்டேன் அண்ணா. வருகைக்கு நன்றி.
thanks for the good movie review .....
அடடே அவசியம் பார்க்கிறேன்,நல்ல பகிர்வுக்கு நன்றி மயில் ராவனன்
@ மகா
நன்றி சார். அடிக்கடி வாங்க.
@ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
அவசியம் பாருங்க. நன்றி வருகைக்கு.
நான் அதிகமாக உலகசினிமாக்கள் பார்த்ததில்லை.பகிர்வுக்கு நன்றி சுவாமி//// நானும்...
Post a Comment