Monday, January 4, 2010

பிலடெல்பியா Philadelphia



















































கசப்பின் வலி -மயில்ராவணன்
மருந்தின் கசப்பை விடவும்,ஊசிகளின் வலியைவிடவும் புறக்கணிப்பின்
வலி கொடுமையானது.’மரணத்தை விடக் கொடியது மறக்கப்படுவது’ 
என்று சுஜாதா கூறுவார். 
‘பிலடெல்பியா’(philadelphia) திரைப்படம் இதைத்தான் கூறுகிறது. 
ஜானதன் டெம்மின் இயக்கத்தில் டாம் ஹாங்ஸ் மற்றும் டென்சல்
வாஷிங்டன் ஆகியோரின் அருமையான நடிப்பில், இறக்கும் தருவாயில் 
உள்ள ஒருவன் நீதியின் முன் கம்பீரமாக போராடி வெல்லும் மிகச்சிறந்த 
திரைப்படம் ஃபிலடெல்ஃபியா. தான் ஒரு Gay என்பதற்காக ஆரம்ப காட்சிகளில் , பிறர் பார்வையில் குற்றவாளியாக தெரிந்தாலும், தன்னுடைய 
personal  விஷயங்களில் அடுத்தவர் தலையிடுவதற்கோ , அதை ஒரு குற்றமாக கருதி வேலைநீக்கம் செய்வதற்கோ பிறருக்கு உரிமை
இல்லை என்பதை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோர்ட்டிலேயே நடைபெற்றாலும்,
கொஞ்சம் கூட சோர்வில்லாமல் நகர்கிறது.
அது ஒரு வழக்கமான பொழுதாகத்தான் ஆண்ட்ரூ பெக்கிற்கு விடிந்தது.அவனுடைய சிறப்பான வேலை மற்றும் பொறுப்புணர்ச்சியின் காரணமாக அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் மேலதிகாரிகள் முக்கிய சில பொறுப்புகளை ஆண்ட்ரூவிற்கு வழங்குகின்றனர்.இந்த இன்ப அதிர்ச்சியில் 
இருந்து ஆண்ட்ரூ மீள்வதற்குள் அவனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கின்றது. மீட்டிங்கின் போது தலையில் ஏற்பட்டிருக்கும் தழும்பிற்கு 
காரணமாக எதையோ சொல்லி மழுப்புகிறார்.
மறுநாள் அலுவலகத்தில் அமர்ந்து முக்கியமான கோப்பு ஒன்றை திருத்திக் கொண்டிருக்கும்போது கடுமையான உடல் சோர்வுக்கு உள்ளாகி நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனையை அடைகிறார்.இரத்தப் பரிசோதனையின் முடிவு மருத்துவரால் வழங்கப்படும்போதுதான், தனக்கு எய்ட்ஸ் இருப்பதை அறிகிறார்.அதே நேரத்தில் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வருவதைத் தொடர்ந்து,போனில் தொடர்பு கொள்கிறார்.அப்போது முக்கியமான கோப்பு ஒன்றைக் காணவில்லை என்பதை அறிந்து பதற்றம் கொள்கிறார்.இருப்பினும் உடனடியாக அலுவலகத்திற்கு சென்று கோப்பை சரிபார்த்துக் கொடுத்து கம்பெனிக்கு கெட்டபெயர் ஏற்படுவதைத் தவிர்க்கிறார்.


             இந்த சூழ்நிலையில்தான் ஆண்ட்ரூ ஒரு 'HomoSexual' என்பது நமக்கு தெரிய வருகிறது.ஆனாலும் இதனை அலுவலகத்தில் உள்ளவர்களிடம் இருந்து மறைக்கிறான்.மேலும் தனக்கு எய்ட்ஸ் என்ற ரகசியத்தையும் தனக்குள்ளாகவே புதைக்க முயற்சி செய்கிறான்.இதுவரை திரைப்படத்தில் tom hanksன் தோற்றம் மிக அழகாகவே உள்ளது.முகத்திலும்,கழுத்திலும் உள்ள சில தழும்புகளைத் தவிர. ஆனால் காலம் தனது மோசமான தீர்ப்பை இவரின் உடலின் மீது எழுதி, இவரை ஒரு எய்ட்ஸ் நோயாளியாக வெளிப்படையாக தெரிய செய்யும் பிற்பகுதி காட்சிகள் கண்ணில் நீரை வரவழைக்கிறது.
           இந்நிலையில் மேலதிகாரிகளால் கோப்பு காணாமல் போனது தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்.நடந்த சம்பவம் துரதிஷ்டமானது என்றும், இது முதல்முறை என்பதால் வருத்தம் கலந்த மன்னிப்பை ஏற்கும்படியும், இனி  நடக்காது என்றும் விளக்கம் அளிக்கிறான்.இருப்பினும் இவரது விளக்கத்தை ஏற்காத கமிட்டி இவரை வேலையில் இருந்து நீக்குவதற்கான உத்தரவை வழங்கி இவரை வேலையில் இருந்து வெளியேற்றுகிறது.
          இதற்கிடையில் ஏற்கனவே தனக்கு அறிமுகமான வக்கீல் ஜோமுல்லர்(டென்சல் வாஷிங்டன்) என்பவரை அணுகி தனக்கு நீதி கிடைக்க செய்யுமாறு வலியுறுத்துகிறார்.பெக் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்பதை உரையாடலின் போது என்பதை தெரிந்து கொண்டு வெறுப்பு கொள்கிறார். மேலும் அவரை உடனடியாக தன்னுடைய அலுவலகத்தில் இருந்து திருப்பி அனுப்ப முயற்சிக்கிறார். இதனால் வெறுப்படைந்த ஆண்ட்ரூ அங்கிருந்து வெளியேறுகிறார்.



                                    
         ஜோமில்லர் இரக்கமில்லாதவர் இல்லை, இருப்பினும், அன்றைய காலகட்டத்தில் போதுமான விழிப்புனர்ச்சி இல்லாத காரனத்தாலும், பெக்கை ஒரு homo sex என்று அறிந்த காரனத்தாலும் மட்டுமே அவரை வெறுக்கிறார் என்பதை பின்வரும் காட்சிகளில் நமக்கு விளங்க செய்கிறார். அவனுடன் கைகுலுக்கியதால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்துகொள்ள அவரது டாக்டரை அணுகுகிறார். படம் வெளிவந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு படித்த திறமையானவர்களைக் கூட சரியாகச் சென்றடையவில்லை என்பதை மிக அழகாக சித்தரிக்கிறார் டைரக்டரு. இந்நிலையில் ஆண்ட்ரூ தனக்காக வாதாட யாரும் முன்வராத நிலையில் தானே தனது வழக்கை நடத்த முடிவு செய்து லைப்ரரியில் அமர்ந்து தற்செயலாக ஜோமில்லரை சந்திக்கிறான்.
           ஆண்ட்ரூ பெக்கின் பரிதாபமான  நிலையைப் பார்த்து ஜோ அவனுடைய வழக்கை ஒத்துக்கொள்கிறார்.இதற்கு பிறகு நடக்கும் பல சம்பவங்கள் மனிதநேயம்,மனித மாண்பு என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்போரை, செயலில் இறங்கி முடிந்தால் அடுத்தவனுக்கு உதவுங்கள் என்பதுபோல் சொல்லாமல் சொல்லி செல்கின்றன.
          ஆண்ட்ரூவின் பாலியல் விருப்பத்திற்கு உலகே எதிர்ப்பு தெரிவித்தாலும் கண்ணியமான அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மேலும் அவரைப் புண்படுத்தாமல் அன்புடன் நடந்து கொள்வது சிறப்பான விசயம்.
          கோர்ட்டில் கோப்பு காணாமல் போனது என்பதைவிட  ஆண்ட்ரூவிற்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பதாலேயே அவன் பதவியில் இருந்து நீக்கப்பட்டான் என்று ஆண்ட்ரூவிற்கு ஆதரவாக ஜோ வாதாடுகிறார்.எதிர்தரப்பில் இருந்து ஆரம்பத்தில் இதனை மறுத்த அலுவலக நிர்வாகம் தனக்கு எய்ட்ஸ் என்பதை சக ஊழியர்களிடம் மறைத்ததை தவறாகக் காரணம் கூறி தாங்கள்  செய்தது சரியே என்பதை நிரூபிக்க முயல்கின்றனர். மேலும் பெக்கிற்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பதை அவர் கூறாமல் எப்படி தங்களுக்கு தெரிய வரும்? என்று திசை திருப்ப முயற்சி செய்யும்போது, ஆரம்பத்தில் முகத்தில் தழும்புகள் இதனை தன்னிடம் இருந்து வெளிப்படுத்தி கொண்டுதான் இருந்தது என்றும், கூற....அதற்கு எதிர்தரப்பு, தங்களால் வெளிப்படையாக ஒரு தழும்பை இப்போது காண இயலாத நிலையில் எப்படி இதை ஏற்றுக்கொள்ள முடியும் எனும்போது, ஜொ அவரது சட்டை பொத்தான்களை கழட்டி உடலில் உள்ள தழும்புகளை காண்பிக்கும்படி கோருகிறார். இது ஒரு முக்கியமான திருப்பு முனையாக வருகிறது.
         இதனைத் தொடர்ந்தாற்போல வரிசையாக வழக்கு மன்றக் காட்சிகள்.வசனங்கள் இப்படத்தின் பலம்.விசாரனையின்போது  உடல் மற்றும் மனச்சோர்வின் காரணமாக கீழே விழும் ஆண்ட்ரூ ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறான்.
       தொடர்ச்சியாக வழக்கை ஜோமில்லர் திறமையாக வாதாடி பாலியல் தொடர்பான முடிவுகளில் அலுவலகத்திற்கு எந்த தொடர்போ, உரிமையோ இல்லை என்பதை நிரூபிக்கிறான்.முன்னதாக ஆண்ட்ரூ பெக்கின் தற்போதைய மனச்சிதைவு மற்றும் மன அழுத்ததிற்கும் அவனது homosexulaity-தியேட்டர் சம்பவத்தை பலர் முன்னிலையில் அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தியதேக் காரணமென்பதையும் நீதிபதிக்கு எடுத்துரைகிறார்.
            ஜூரியின் கருத்தைக் கேட்கும் நீதிபதி மிகப்பெரிய தொகையை கார்ப்பரேட் கம்பெனிக்கு அபராதமாக விதித்து ஆண்ட்ரூவிற்கு கிடைக்கும்படி செய்கிறார்.இதனை ஜோ ஆண்ட்ரூவிற்கு தெரிவித்துவிட்டு வீடு வந்து சேரும்போது ஆண்ட்ரூவின் மரணச்செய்தி வருகிறது.ஆண்ட்ரூவின் இருதிச்சடங்கு நிகழ்ச்சியில் அவரது மங்கிய குழந்தை நினைவுகள் தொலைக்காட்சியில் காண்பதோடு நம்முன் சலனத்தை ஏற்படுத்தி செல்கின்றன.
            ஆண்ட்ரூ பெக்காக நடித்துள்ள tom hanksன் நடிப்பு அபாரம்.மிகவும் சிக்கலான,controversy கருவை மிக அழகாக,அருவருப்பற்ற நிலையில் படமாக்கியிருப்பது பாராட்டுக்குறியது.நோயின் முதிர்ச்சியில் படிப்படியாக உடலியல் மாற்றங்களை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ள விதம் பாராட்டுக்குரியது.ஜோமில்லராக வரும் டென்சல் வாஷிங்க்டன் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்.
           குறிப்பாக சில காட்சிகள் மனதைக் கீறி விடுகின்றன.ஆண்ட்ரூ கோர்ட்டில் சட்டையைக் கழட்டி தழும்பினைக் காண்பிக்கும் காட்சி....மிகை நடிப்பில்லாமல் சோகத்தை வரவழைத்துவிடும்.மரணப் படுக்கையில் இருக்கும் ஆண்ட்ரூவை ஒவ்வொருவராக நலம் விசாரிக்கும்போது நம் கண்கள் குளமாகிவிடுகின்றன.வழக்கு தொடர்பாக வீட்டில் ஜோவும், பெக்கும் விவாதிக்கும் தருனங்களில், opera  பாடல் ஒன்றில் மனம் ஒன்றி அதன் அர்த்தத்தை கையில் மருந்து ஏறும் நிலையில் நடந்து கொண்டே பேசும் காட்சியில், நோயுடன் வாழ்வதை விட தான் இறப்பதையே அதிகம் விரும்புகிறார் என்பதை மறைமுகமாக வெளிப்படுதுகிற காட்சி சிறப்பானது.
          எது சரி எது தவறு என்பதையெல்லாம் தீர்மானிப்பதற்கு நமக்கு உரிமையில்லைஆனால் மனிதாபிமானம் என்ற ஒன்றை மட்டும் மனதில் கொள்வதற்கு உரிமை உண்டு என்பதை அருமையாக உன்ணர வைக்கும் திரைப்படம்தான் பிலடெல்பியா’(Philadelpia).


டிஸ்கி: 
      'The Silence Of The Lambs' என்ற அற்புதமான படத்தை இயக்கிய ’Jonathan Demmeன் 
மற்றுமொரு தரமான படைப்பே இந்தப் படம்.

8 comments:

அகநாழிகை said...

அருமையான படம், சிறப்பான விமர்சனம்.
வாழ்த்துகள் சாமி.
(இந்த டிவிடி வேண்டாம். புதுசா ஏதாவது இருந்தா போடுங் சாமி)

- பொன்.வாசுதேவன்

Cable சங்கர் said...

க்ளைமாக்ஸில் டாம்ஹாங்ஸ் இறக்கும் காட்சி மிக அருமையாய் இருக்கும்

மணிஜி said...

கொஞ்சம் நீளமாய் இருந்தாலும் சுவாரசியமாக இருக்கிறது..

யாத்ரா said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சாமி, திரைப்பட்த்தின் உணர்வுகளை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள், அருமை. இன்னும் கதைக்களம், பின்புலம், தொழில்நுடபம், எடிட்டிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை, நடிகர்களின் உடல்மொழி குறித்த நுடபமான வர்ணனைகள், டைரக்டோரியல் டச், திரைக்கதை நுட்பம், வசன நேர்த்தி, பெற்ற விருதுகள், இயக்குனர் மற்றும முக்கிய நடிகர்கள் பற்றிய குறிப்புகள் என இன்னும் இன்னும் திரைப்பட்த்தை பிரித்து மேய்ந்து எழுதி சிறந்த திரைப்பார்வைகள் எழுத என் வாழ்த்துகள், இது மிகச்சிறந்த விஷயம், துவங்கியிருக்கிறீர்கள், தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

நல்லதொரு திரைப்படம் குறித்த சிறப்பான பதிவு. ஆம் அந்த opera இசையும், ஹாங்ஸின் கண்ணீரும் நெகிழ வைப்பவையே.பாராட்டுக்கள்.

Paleo God said...

மிக்க நன்றி பகிற்தலுக்கு.. பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்..::))

பாலா said...

முதல் 4-5 பாராக்களில் ஃப்ளோ மாறியிருக்குங்களா? ஒரு கன்ஃப்யூஷன்.

ஆனா.. இன்னா படம்!!!

--

நெசமா சொல்லுறேன். நம்ம ஏரியா மேட்டரெல்லாம் ரொம்ப எழுதாதீங்க. அப்புறம் மைனஸ் ஓட்டுதான் குத்துவேன். ;)

மரா said...

@ அகநாழிகை, கேபிள், தண்டோரா, பலா ,க காதலன்,யாத்ரா,ஹாலிவுட் பாலா

அனைவரின் வருகைக்கும்,கருத்துக்களும் நன்றி.

@ஹாலிவுட் பாலா
//முதல் 4-5 பாராக்களில் ஃப்ளோ மாறியிருக்குங்களா? ஒரு கன்ஃப்யூஷன்//

இருக்கலாம்.
//அப்புறம் மைனஸ் ஓட்டுதான் குத்துவேன். ;)//
பாஸ்...நான் அந்த ஆட்டையிலே கிடையாதே. இப்ப என்ன பண்ணுவீங்க...:)