Thursday, January 7, 2010

வால்கிரி----ஒரு தோல்வியின் இசை VALKYRIE

மயில்ராவணன்
லேண்ட்மார்க் டிவிடி அரங்கினுள் நுழைந்தவுடன் நமது கண்னில் படுமாறு “வால்க்ரி(valkyrie)” சிடிக்கள் அடுக்கி வைக்கப்படிருக்கின்றன. இதைப்பற்றிய எந்த விவரமும் அறியாத நிலையில் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து சமீபத்தில் பார்த்து முடித்தேன். வழக்கம்போல “டாம் குரூஸின்” மற்றொரு “MileStone" ஆகவே இருந்தது.
”பிரயான் சிங்கரின்” இயக்கத்தில், அருமையான ஒளிப்பிதிவு மற்றும் இசையில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம், இரண்டாம் உலகப்போரின் போது, போரின் போக்கையையே மாற்ற முயற்சி செய்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில், கலோனல் பதவியில் இருக்கின்ற டாம் குரூஸ், ஜெர்மனியின் மீதும், ஜெர்மானிய போர்வீரர்கள் மீதும், அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.                                                                               

                                                                                
அங்கு நடைபெறுகின்ற ஒரு யுத்தத்தில், ஒரு கையையும், ஒரு கண்ணையும் இழந்து ஜெர்மனி திரும்புகிறார். அதே நேரம், ஹிட்லரின் மீது நம்பிக்கை இழந்த ஜெனரல் ட்ரெஸ்கோவும் அவரது உதவியாளரும்,
 அவரை கொல்வதற்காக வெடிகுண்டு பார்சல் ஒன்றை பரிசளிக்கிறார்கள். ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, யாருக்கும் தெரியாமல் அதனை மூடி மறைதுவிடுகிறார்கள் டிரெஸ்கோவும், பெர்லினில் உள்ள மற்றொரு நன்பர் ஓப்லிக்கும். ஆனால் சரியான நபரை கண்டடைந்து மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கும் நிலையில், இதைபோலவே கருத்து கொண்ட ஸ்டாஃபன்பர்க்கை (டாம் குரூஸ்) சந்திக்கிறார்கள்.

                                                           
ஸ்டாஃபன்பர்க் தனக்கு முழு அதிகாரம் வழங்க்பட்டால் தன்னால் இதனை முடிக்க முடியும், என்றும் மேலும் , இதனை ராணுவ மற்றும் அரசியல் கூட்டு முயற்சியின் மூலமாக மட்டுமே சாதிக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட இந்த இரகசிய குழு பொறுப்பை இவருக்கு அளிக்கிறது.
ஹிட்லர் கொல்லப்பட்டால் மட்டும் போதாது என்றும், அவருக்கு துணையாக இருக்கும், ஜெர்மன் கோரிங் மற்றும் கொள்கை பரப்பாளர் கோயபல்ஸ் ஆகியோரும் கொல்லப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஆப்ரேஷன் வால்க்ரி என்ற ஒரு சதித்திட்டத்தை உருவாக்குகிறார். இந்த ஆப்ரேஷன் வால்க்ரி என்பது, ஆபத்து காலத்தில், ஹிட்லர் எதிரி படையினரால் கொல்லப்பட்டால், அடுத்து போரின் நடவடக்கியைலும், அரசியல் நடவடிக்கையிலும் நடக்க வேண்டியவற்ற உள்ளடக்கியது. இதைத் தொடர்ந்து, தனித்தனியான மாநிலங்கள் ஒருங்கினைக்கப்படும், ஹிட்லரின் நாசிப்படை ஒடுக்கப்பட்டு, அதன் செயல் பிரிவு தலைவர்களான கோயபல்ஸ் மற்றும், கோரிங் ஆகியோர் தலைமறைவாக்கப்படுவார்கள் என்று ஹிட்லரால் தீர்மானிக்கப்பட்டது. இது அந்த காலத்தில் மிகப்பிரபலமான வாக்னர் என்ற இசையமைப்பாளரால் உருவாக்க்கப்பட்ட ஆர்கெஸ்ட்ராவாகும். இது ஹிட்லரின் ஃபேவரிட் லிஸ்டாகும்!.

                                                                            
இந்த திட்டதில் பெரிய மாற்றங்களை உருவாக்கி, அதன் மூலம் ஹிட்லர் கொல்லப்பட்டால், அடுத்த கட்டமாக, ஜெர்மனி ஸ்டாஃபன்பர்க் தலைமையில் ஒருங்கினைப்பட்டு, அனைத்து நாசி தலைவர்களும் சிறையிலடைக்கபட்டு, அவசர நிலை பிரகடனத்தின் மூலம் ரிசர்வ் ஆர்மி மூலம் சட்டம் ஒழுங்கு கட்டுபடுத்தப்பட்டு, பேச்சு வார்த்தைக்கு எதிரி நாடுகளுடன் தயார் செய்யப்படும் என்று மாற்றி அமைக்கிறார். ஹிட்லரை அவரது வீட்டில் வுல்ஸ் லயரில் சந்த்தித்து , தன் புதிய சட்டத்திருத்ததின் அவசியத்தையும் அத்தியாவசியத்தையும் கூறி ஒப்புதல் பெற்கிறார். ஹிட்லரும் அரை மனதுடன் இவர் மீதுள்ள நம்பிக்கையால் ஒப்புதல் அளிக்கிறார்.
இதைத்தொடர்ந்து, ஸ்டாஃபன்பர்க் மற்ற சகாக்களுடன் சேர்ந்து, பிளாஸ்டிக் டெட்டனேட்டர், பிரிட்டிஷ் பென்சில் ஆகியவற்றை கொண்டு வெடிகொண்டு ஒன்றை தயாரிக்கிறார். இதனை
அறிந்த ஜெனரல் ஃபிரம் என்பவர் இவரது முயற்சி தோல்வி அடைந்தால் தானே ஸ்டாஃபன்பர்க் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கூறி எச்சரிக்கை செய்கிறார். இருந்தாலும் தன்னுடைய முய்ற்சிக்கு உத்வியாக, ஹிட்லரின் அலுவலகத்தில் கம்யூனிகேஷன் ச்சீஃபாக பனிபுரியும், ஒருவரின் மூலம் தொலைத்தொடர்பை நிறுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் சதிக்கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை அளிக்கிறார்.
போர் நடவடிக்கைகளை விவாதிப்பதற்காக ஹிட்லர் ஸ்டாஃபன்பர்க் உள்ளிட்ட அனைத்து ரானுவத்தளபதிகளையும் தனது அலுவலகத்திற்கு அழைக்கிறார். அங்கு 1.5 கிலோ வெடிகுண்டுகளுடன் ஸ்டாஃபன் பர்க்கும் , அவரது உதவியாளரும் செல்கிறார்கள். வெடிகுண்டை செட் செய்வதற்கு தனி அறை வேண்டும் என்பதால் , காலையில் முகச்சவரம் செய்யும்போது, பிளேடால் கழுத்துக்கு கீழே கீரிக்கொள்கிறார். இதனால் இரத்தக்கறை படிந்த தனது மேலாடையை மாற்றுவதற்கு தனி அறை வேண்டும் என்று கூறி அங்கு சென்று, சட்டையை அணிந்து கொண்டே, வெடிகுண்டை தயார் செய்கிறார். உதவியாளரை தான் மட்டும் தனியாகவே இந்த சதித்திட்டத்தை செயல் படுத்த முடியும் என்றும், அதனால் காரில் சென்று காத்திருக்கும்படியும் உத்தரவிடுகிறார்.
கைப்பையில் எடுத்துசென்ற வெடிகுண்டை ஹிட்லரின் காலுக்கு அருகாமையில் வைத்துவிட்டு, தனது சகாக்களின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். ஹிட்லர் உரை நிகழ்த்த ஆரம்பித்த சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியெறுகிறார். இவரது திட்டப்படி அடுத்த பதினைந்து நிமிடங்களில் வால்க்ரி இனிஷியேட் செய்யப்பட்டு விடும் என்று நம்பி வெளியேறுகிறார். வெளியே வந்த அடுத்த நிமிடம், கட்டிடமே அதிரும் அளவிற்கு கரும்புகையை கக்கியபடி குண்டு வெடிப்பதை தனது கண்களாலேயே கான்கிறார். இவரது திட்டப்படி அனைத்து செய்தித்தொடர்புகளும் காலவரையின்றி நிறுத்தப்படுகின்றன. ஹிட்லரின் ஆதரவாளர்கள், ஹிட்லருக்கு என்ன ஆனது என்பதிலேயே குறியாக இருக்கின்ற நிலையில், இவர் அங்கிருந்து காரில் தப்பிச்செல்வதை கவனிக்கத் தவறுகின்றனர்.
வழியில் மறிக்கும், செக்போஸ்ட் காவலாளியிடம், தான் ஹிட்லருக்கு நெருங்கியவன் என்றும் வேண்டுமானால் ஹிட்லரிடம் உடனிடியாக பேசித்தெரிந்துகொள் என்றும் மிரட்டி விட்டு அங்கிருந்து விமானத்தில் பெர்லினுக்கு திரும்புகிறார். முன்னதாக தனது மனைவி , குழந்தைகள் அனைவரையும் யாருக்கும் தெரியாத படி தொலை தூரத்தில் உள்ள கிராமத்திற்கு பாதுகாப்பாக அனுப்பட்டதை நினைவு கூர்கிறார்.
ஆனால் பெர்லினில் கால் பதித்த பிறகுதான், தன்னுடைய திட்டத்தில் உள்ள பின்னடைவை உணர்கிறார். ஓல்பிக் எந்த உத்தரவையை ரிசர்வ் ஆர்மிக்கு வழங்காமல் மவுனம் காப்பதை
விரும்பாத ஸ்டாஃபன்பர்கின் நன்பர் Quirnheim அவசர சட்டமான வால்கிரியை இனிஷியேட் செய்கிறார். இதனை அறியாத ஸ்டாஃபன்பர்க் ஓல்பிக்கை இரகசிய போனில் அழைத்து ஹிட்லரின் அலுவலகம் வெடித்ததை தானே தனது கண்களால் பார்த்ததாகவும், ஹிட்லர் இறந்து விட்டதாக உடனடியாக அனைவருக்கும், இரகசிய தந்தி அனுப்பும்படிய்ம் சொல்ல ஓல்பிக் அதற்கு கீழ்படிகிறார். ஒட்டுமொத்த ஜெர்மனியும் பதறுகிறது. இரகசிய தொலைதொடர்பு அதிகாரிகள் நடுநிலையாளர்கள் என்பதால் எந்த செய்தியையும் மறைகாமல் அனைவருக்கும் வால்கிரி ஆனையை அனுப்பி வைக்கிறார்கள்.
ரிசர்வ் ஆர்மி, எஸ் எஸ் படையை சுற்றி வளைத்து கைது செய்கிறது, ஹிட்லரின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்படுகிறார்கள். வால்கிரிக்கு பனியாத மாகான மேயர்கள் கைது செய்யப்பட்டு, அதிரடியாக அவை பெர்லினை தலைமையிடமாக ஏற்றுக்கொள்ளச்செய்யப்படுகிறார்கள். தலைமறைவாக இருந்த ஹிட்லரின் அரசியல் எதிரிகள் முக்கிய பதவிகளில் பொறுப்பேற்கிறார்கள். ஜெர்மானிய மக்கள் கொடுங்கோலர் ஹிட்லரின் இறப்பை கொண்டாடும் விதமாக ஆப்ரேஷன் வால்கிரிக்கு நேரடி ஆதரவளித்து ஸ்டாஃபன்பர்குடன் இணைகிறார்கள். இவை அனைத்து, ஹிட்லர் கொல்லப்பட்டதாக வெளியான அடுத்த இரண்டரை மணி நேரத்தில் நடைபெறுகின்றன.
ஹிட்லரின் வலது கரமான கோயபல்ஸை கைது செய்ய ரிசர்வ் ஆர்மி அவரது வீட்டை முற்றுகையிடுகிறது. இதற்கு சற்றும் அஞ்சாத கோயபல்ஸ் கைது செய்ய வந்த இரானுவத்தளபதியை மிகச்சாதாரனமாக எதிர்கொண்டு தொலைபேசியில் ஒரு முக்கிய நபர் காத்துக்கொண்டிருப்பதாக கூறி பேசும்படி கோருகிறார். தொலைபேசியில் பேசிய குரலுக்கு சொந்தக்காரர், ஜெர்மனியின் சர்வாதிகாரி, ஜெர்மனியைத்தன்னால் மட்டுமே காக்கமுடியும் என்று கருதிய அடோல்ஃப் ஹிட்லர் என்பதை உணர்ந்த கேப்டன், அங்குசத்திற்கு பயப்படும் யானையைபோல அச்சத்துடன் அடுத்த உத்தரவை பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.
நடந்ததை அறியாத ஜெர்மனியின், மாகானங்களை ஒருங்கினைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார். தொடர்பற்று இருந்த அவரது அலுவலக வானொலி திடீரென உயிர்பெற்று ஹிட்லர் உயிருடன் உள்ளார் என்றும், கொல்ல நடந்த முயற்சியில் லேசான காயத்துடன் உயிர் தப்பி விட்டார் என்றும் , சதிகார்களும் அவர்களின் ஆதரவாளர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தொடர்ந்து அறிவிக்கிறது. இது தவறான தகவல் என்றும், குண்டு வெடிப்பை தானே நேரில் நிகழ்த்தியதாகவும், ஆதலால், இந்த பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். இதற்கிடையில், ஸ்டாஃபன்பர்கின் தொலைதொடர்பு முழுவதும் துண்டிக்கப்படுவதை தொடர்ந்து, ஹிட்லர் உயிருடன் உள்ளார் என்பதை மறைமுகமாக உணர்ந்து கொண்ட அவரது சகாக்கள் அவரிடமிருந்து பிரிந்து வெளியேறுகிறார்கள்.
கைது செய்யப்படுவதற்காக இரானுவம் தனது அலுவலக வாசலுக்கு வந்திருப்பதை அறிந்த ஸ்டாஃபன்பர்க் அங்கிருந்து தனது கைத்துப்பாக்கியுடன் வெளியேற முயற்சி செய்யும் போது,
தனது சில ஆதரவாளர்கள், மற்றும் மெய்காப்பாளரோடு கைது செய்யப்படுகிறார். விசாரனையின் முடிவில் அதிரடியாக மரணதண்டனை பெறுகிறார்.
மிகச்சிறப்பான காட்சி அமைப்பின் மூலமும், ஒரு வேகமான திரைக்கதையுடனும், ஹிட்லர் இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட வில்லை என்ற வரலாற பல முறை படித்திருந்த போதிலும், திரில்லாகவே கதை நகர்த்தி இருப்பதை மிக முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். சூழ்நிலை , வசனம் ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி மவுனம் காக்கும் இசை தேவையான இடங்களில் மழையாய் பொழிகிறது. முக்கியமாக வாக்னரின் இசையை பயன்படுத்தி, ஸ்டாஃபன்பர்க் எண்ணத்தை வசனமின்றி நமக்கு உணர்த்தி இருப்பதை கூறலாம்.
தேர்ந்த நடிகர்களை பாத்திரப்படைப்பிற்கு தக்க முறையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்டாஃபன்பர்கின் உண்மையான தோற்றத்திற்கும், டாம் குரூஸின் தோற்றத்திற்கும் பத்து சதவீத வேறுபாடே தெரிகிறது. அவ்வளவு நேர்த்தியான் மேக்கப் மற்றும் உருவ அமைப்பு. ஜெர்மானிய கலாசாரத்தை அருமை பிரதிபலிக்கும் பல்வேறு பாத்திரபடைப்புகள் இடம்பெற்றிருக்கின்றனர். வரலாற்றை திருத்தி கூறாமல், ஏற்கனவே வெளியான வால்கிரி என்ற நூலை காட்சிப்படுத்தி இருப்பது மிகச்சிறப்பான அனுபவமாக இருக்கும் என்பதே உண்மை.
கடைசி காட்சியில், தான் கனவு கண்ட தேசத்தை பார்ப்பதற்கு முன்பே தான் கொல்லப்படுவதற்காக தன் ஒற்றைக்கண் கலங்கும் காட்சியும், தனது உயரதிகாரி கொல்லப்படுவதற்கு முன்பு தனது உயிர் போக வேண்டும் என்று துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கும் மெய்காப்பாளரும், சில பர்சனல் காரனங்களுக்கு, தானே தலையில் சுட்டுக்கொண்டு இறந்து போகும் கவர்னரும், தான் துவக்கிய இந்த சதி தோல்வி அடைந்து விட்டதெ என்ற துயரத்தில் கையெறி குண்டுக்கு தன்னையே பலி கொடுக்கும் ஜெனரல் டிரெஸ்கோவும் அருமையான காட்சிகளாகும்.
நாம் வன்முறையை ஒருபோதும் விரும்புவதில்லை, ஆனால் வரலாறு தினமொரு வன்முறையை நிகழ்த்திக் கொண்டுதானிருக்கிறது. அவை காலத்தின் பல்வேறு படிநிலைகளில் கறைகளாக படிந்து கொண்டிருக்கின்றன. மக்களை நேசிக்காத எவரையும் நன்பர்கள் கூட நேசிப்பதில்லை என்பதையும், ஒரு வன்முறைக்கு மற்றொரு வன்முறை தீர்ப்பாகாது என்பதையும், காலம் தனது புனிதமான எழுதுகோலால், எழுதிக்கொண்டேதான் இருக்கிறது என்பதையுமே இந்த வால்கிரி திரைப்படம் உணர்த்திச் செல்கிறது. மனித நேயத்தையும், மக்களையும் நெசித்து, காலம் அழகான நாட்களை மட்டுமே எதிர்வரும் நாட்களில் குறிப்பெடுக்கும் என்ற ஆவலோடு வேறொரு திரைப்படத்தில் தொடர்கிறேன்.


இந்த திரைப்படைத்தைப் பற்றிய மேலும் விவரங்கட்கு:

          http://www.imdb.com/title/tt0985699/
         http://www.youtube.com/watch?v=FHtCaVtryiE


டிஸ்கி:
    இரண்டு மணிநேரப்படம்....அதனால் சுறுக்கி எழுத மனமில்லை..

13 comments:

நிலாரசிகன் said...

//
இரண்டு மணிநேரப்படம்....அதனால் சுறுக்கி எழுத மனமில்லை..//

சுருக்கி எழுதாவிட்டாலும் நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தை பார்த்தேன். நல்லதொரு பகிர்வு :)

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

படத்தை மிகவும் ஆழ்ந்து ரசித்திருக்கிறீர்கள் என்பது பதிவில் தெரிகிறது. ஜெர்மனியர்கள் சிலர் இன்றும்கூட ஸ்டான்ஃபர்க்கை நினைத்து பெருமைப்படுவார்கள் அல்லவா. அதுதானே அந்த மகத்தான தோல்வியின் வெற்றி. நல்லதொரு பதிவு.

மரா said...

@நிலா

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

@கனவுகளின் காதலன்

ரொம்பக் காலம் என் பெயரை ’staffenberg’ என்றே வைத்திருந்தேன்.அவ்வளவு அற்புதமான பாத்திரம்,படம்.வருகைக்கு நன்றி.

மணிஜி said...

சுவாமி...நல்ல சினிமா ரசனைதான் உங்களுக்கு. தொடருங்கள்..

சங்கர் said...

கண்டுபிடிச்சு வந்துட்டோமில்ல, இருங்க, படிச்சிட்டு வந்து சொல்றேன்

மரா said...

@ தண்டோர @சங்கர்
வருகைக்கு நன்றி.

அகநாழிகை said...

//வால்கிரி//

:)))))))

RAMAYYA said...

சுவாமி ஒரு நல்ல ரசிகர் என்பது அறிந்து இருக்கிறேன். ஆழ்ந்த சிந்தனையும், எழுத்து
ஆற்றல் உள்ளவர் என்பது VALKYRIE பகிர்வு மூலம் தெரிகிறது

butterfly Surya said...

கொஞ்சம் சுருக்கி எழுதலாம். பத்தி பிரித்து போடவும்.

பெரிய வால்.

பாலா said...

கொஞ்சம்.. பாரா, கமா, புல்ஸ்டாப் எல்லாம் போட்டீங்கன்னா... புண்ணியமா போகும். படிக்கும் போதே மூச்சு வாங்குது! :) :)

எனக்கு என்னமோ.. இந்தப் படம் பிடிக்கவே இல்லீங்க. எப்படா தியேட்டரை விட்டு வெளிய வருவோம்னே உட்கார்ந்திருந்தேன்.

மரா said...

@ செர்வின்

வருகைக்கு நன்றி.ஏதோ எழுதுறேன் பாஸ்.பெரிய தலைகள்லாம் இருக்காங்க.என் நல்லநேரம் நீங்க அதெல்லாம் வாசிக்கல.

@ Butterfly சூர்யா
அவசியம் சுருக்கி எழுத முற்சிக்கிறேன்..அடிக்கடி இங்கிட்டும் பறங்க்...ஸாரி வாங்க..

மரா said...

@ Hollywood Bala

'Opinion differs'. ஆனால் இது டாம் க்ரூஸின் masterpiece பாஸ்.கண்டிப்பாக இனி பாரா, கமா, புல்ஸ்டாப்போட எழுதுறேன்.நன்றி

க ரா said...

மாம்ஸ் நீங்களும் ஒலக பட ரசிகரா :) நீங்களும் அப்படின்னா கத போட்டிக்கி வாறிகளா :) டீ.வீ.டீ ய யாருக்கும் கொடுத்து போடாதீங்க.. வந்து வாங்கி பாத்துக்கறேன் :)