நவம்பர் 1965 வியட்னாம் டிராங்க் பள்ளத்தாக்கு(மரணப் பள்ளத்தாக்கு)ல் நடந்த உண்மைச்சம்பவங்கள்.இந்த கதை வியட்னாம் வீரர்களுக்கு காணிக்கை,அமெரிக்க வீரர்களுக்கு testament என்ற வரிகளுடன் படம் ஆரம்பிக்கிறது.
இந்த கதையை சொல்வதானால் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி ஃப்ரெஞ்ச் படை 1954ல் நடத்திய தாக்குதலை 5 நிமிடம் தான் காண்பிக்கின்றனர்....திரை முழுதும் இரத்தம் ஓடுகிறது.வியட்னாம் வீரர்கள் எளிதாக வெல்கின்றனர்.
மெல்கிப்ஸன் லெப்டினன்ட் கர்னல் ஹால்மூராக வாழ்ந்திருப்பார்.அவர் மனைவியாக வரும் மேடலின் ஸ்டொய் படம் முழுவதும் அழுவாச்சிதான்.சர்ஜண்டாக வரும் ஸாம் எலியட் படம் முழுவதும் மெல்கிப்ஸனோடைய வருவதால் அவரும் முக்கிய பங்கு வகிக்கிறார்.போர்க்களத்தில் நொடிப்பொழுதில் முடிவுகள் எடுத்து உத்தரவுகள் பிறப்பிப்பதனாலும் சரி சிறு குழந்தைகளின் தகப்பனாகவும் சரி,மனைவிக்கு நல்ல கணவனாகவும் சரி,கதாபாத்திரத்தின் கணம் அறிந்து நடித்திருப்பார் மெல்கிப்ஸன்.
ஹால்மூர்(மெல்கிப்ஸன்) புதிதாக கலோனலாகப் பதவியேற்று தன்னுடைய அனுபவமில்லா படையினருக்கு பலவிதமான போர்த்தந்திரங்களையும், புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் விமானப்படையைப் பற்றியும் விளக்குகின்றக் காட்சி,சர்ச்சில் ஹால்மூரும் அவரது படைவீரர் ஒருவருக்கருமான உரையாடல்-பின்பு அவ்வீரன் போரில் இறந்து கிடக்கும் போது அவன் கையில் இருக்கும் ஜெபமாலையைப் பார்த்து அடையாளம் கண்டு கண்கலங்கும் காட்சி,ஹால்மூர் மற்றும் இதர வீரர்கள் வீட்டைவிட்டு நள்ளிரவில் மனைவியரைவிட்டு பிரிந்து போருக்கு கிளம்பும் காட்சி,போரில் எரிந்து போன நண்பனை இழுக்கும்போது சதை கையோடு வரும் காட்சி-அந்த சமயம் பிண்ணனியில் வரும் flute இசை இன்னும் எத்தனையோ நெஞ்சைவிட்டு நீங்காத காட்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
வீட்டில் இருக்கும் சமயத்திலெல்லாம் 1950ல் ஃப்ரெஞ்ச் படைக்கும் வியட்னாம் படைக்கும் நடைபெற்ற போர் பற்றிய நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறான்.
போர் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் அமெரிக்கப் படையை நிலைகுலைய செய்கின்றனர் வியட்னாம் வீரர்கள்.நெடிய மலைகளும்,புட்புதர்களும் வியட்னாம் படையினர்க்கு சாதகமாக இருக்கின்றன.
இருப்பினும் அமெரிக்கப் படையினரின் புதிய விமானப்படையைக் கொண்டு ஓரளவு சமாளிக்கின்றார் கலோனல் ஹால்மூர்.ஒவ்வொரு முறையும் ஹால்மூர் பலவாறு வியூகங்கள் அமைத்து போரிட்டாலும் வியட்னாம் வீரர்கள் இவர்களை வளைத்து வளைத்து தாக்குகின்றனர்.இதற்கிடையே இவர்களுடன் வந்த ஒரு நிருபர் போர் படக்காட்சிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கிறான்.ஒரு கட்டத்தில் போரின் உக்கிரம் அதிகமாகவே நிருபரிடம் அமெரிக்க அதிகாரி துப்பாக்கி,குண்டுகள் தந்து போரிடச் செய்கிறான்.
ஹால்மூர் கடைசியில் ‘Broken Arrow broken arrow' என்று 4,5 முறை ஆபத்து செய்தியை base stationக்கு அறிவித்ததும் அதிபயங்கரமான போர் விமானங்களை அனுப்பி குண்டு மழை பொழிகிறது அமெரிக்க ராணுவம்.
போர் மூர்க்கமாகப் போய்க்கொண்டிருக்கிறது.வியட்நாம் படைத்தலைவனும் பின்னால் இருந்து தாக்குமாறு பல வழிகளைக் கூறியவண்ணம் உள்ளான்.ஒருகட்டத்தில் அமெரிக்க ரணுவத்தின் கை ஓங்குகிறது.
வியட்னாம் படைத்தலைவன் கூடாரத்தைக் காலி செய்துவிட்டு
ஓடுகிறான்.பிணக் குவியல்களும்,கைப்பற்றப்பட்ட ஆயுதக்குவியலும் மலை போல கிடக்கின்றன.நிருபர்கள் வேறு இவையனைத்தையும் பார்வையிடுகின்றனர்.மெல்கிப்ஸன் குலுங்கி குலுங்கி அழுதுவிட்டு மிச்சமுள்ள வீரர்களுடன் ஊர் திரும்புகிறான்.இறுதிக்காட்சிகளில் வரும்இசையும்,ஒளிப்பதிவும்,ஒலிப்பதிவும் நனி நன்று.
இறுதி 15 நிமிடங்கள் ரொம்ப அருமையாக கொண்டுபோயிருப்பார்கள்.
வியட்னாம் படைவீரன் களத்தைப் பார்வையிடுதல்,மெல்கிப்ஸன் வீடு திரும்புதல்,கல்வெட்டு ......etc..etc..
இது வியட்னாம் போரில் பங்குபெற்ற அமெரிக்க ராணுவம் பற்றி மட்டும் கூறவில்லை,மாறாக வியட்னாம் படையினரையும் சிறந்த வீரர்களாகவும்,
நேர்மையானவ்ர்களெனவும்,போரின் தாக்கங்கள்,பின்விளைவுகளையும் சோகத்தையும் படைவீரர்களின் மனைவியர் படும் துன்பத்தைச் சித்தரிக்கும் படமாகவும் உள்ளது.நிறையக் காட்சியமைப்புகள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின்
‘Saving Private RYAN'ஐ ஞாபகப்படுத்துகின்றன.இருப்பினும் இதுவும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.
இந்த படத்தின் ட்ரைலர் இங்கே
மேலும் இப்படம் பற்றிய தகவல்களுக்கு இங்கே இருக்கு.
டிஸ்கி:
வித்தியாசமான war cinema.போர்க்களத்தை மட்டும் காண்பிக்காமல் parallel ஆக அவர்களின் குடும்பத்தையும் அவர்கள் படும் துயரததையும் சேர்த்துக் காண்பித்திருக்கிறார்.சமயத்தில் அதுவே சில நேரத்தில் தொய்வையும் ஏற்படுத்துகின்றது.
12 comments:
இந்த திரைப்படம் இதுவரை பார்க்கவில்லை. நிச்சயம் பார்க்க வேண்டும்
பகிர்விற்கு நன்றி.
@butterfly சூர்யா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூர்யா..
நீங்க சொன்ன டிஸ்கிதான் இந்தப் படத்தைப் பத்திய என் எண்ணம். மனதில் ஒட்டாத இன்னொரு காரணம் எனக்கு வியட்நாம் போர் படங்கள் மேல் அத்தனை ஈர்ப்பு வரவே மாட்டேங்குது. Rescue Dawn, Full Metal Jacket மாதிரி சில படங்கள் மட்டும் விதிவிலக்கு.
பாரா, ஃபுல்ஸ்டாப், கமா எல்லாம் போட்டதற்கு நனி நன்றி! :)
உங்களுக்கு போர் படங்கள் விருப்பம் போலத் தெரியுது (Black Hawk, Valkyrie ).
அப்படின்னா.. Letters From Iwo Jima & Flags of Our Fathers பார்த்துட்டு எழுதுங்க தல. க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில்.. ரெண்டும் கலகக்கும். அதிலும் முதல் படம் நாஸ்தி.
ரொம்ப நாளா எழுதனும்னு பார்க்கிறேன். முடிய மாட்டேங்குது.
நண்பா மிகவும் அருமையான படம் இது மெல்கிப்சன் அருமையான குடும்பத்தலைவராகவும் போர்ப்படை கேப்டனாகவும் கலக்கியிருப்பார்,மீண்டும் பார்க்க நினிக்கிறேன்.
@ ஹாலிவுட் பாலா
போர் சினிமாக்கள் ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பாக நீன்க சொன்ன படங்கள் கிடைச்சா பாத்துட்டு எழுதுறேன்.
நன்றி.
@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
இங்கிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி.
@ஹாலிவுட் பாலா
// பாரா, ஃபுல்ஸ்டாப், கமா எல்லாம் போட்டதற்கு நனி நன்றி! //
ஏண்ணே இப்பிடி...ஏதோ தமிழ்மொழி மேலேயிருந்த கள்ளக்காதல்ல அப்பிடி எழுவிட்டேன்....முடியல...:(
இன்னிக்குத்தான் முதல் வருகை. மைண்ட்ல வச்சுக்கறேன். தொடர்ந்து வர்ரேன்... வாழ்த்துக்கள்...
@ அண்ணாமலையார்
வாங்க..வாங்க.ரொம்ப சந்தோசம்.பைக்கை கிளப்புனாலே உங்க ஞாபகம்தேன் வருது..நன்றி.
அருமையான பதிவு.. ஆனால் வியட்நாம் போர் பற்றிய படங்கள் அனைத்தும் மிகவும் வெறுமையானவை. உலகப் படைகளுக்கே உரிய அழகியல் இந்த மாதிரிப் படங்களில் கொஞ்சம் கம்மி என்று நினைக்கிறேன்.
nice review .....
உங்கள் விமர்சனம் படித்தால் படமும் விதியாசமாங்க இருக்கும் போலிருக்கு. பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி :)
Post a Comment