Saturday, January 2, 2010

Black Hawk Down பிளாக் ஹாக் டவுன்

                                                  மயில்ராவணன்
 "இறந்தவனுக்கு மட்டுமே போரின் விளைவு முழுதாய் தெரியும்"--பிளாட்டோ.

பசியை ஆயுதமாகப் பயன்படுத்த தெரிந்த பலரை இந்த வரலாறு பார்த்திருக்கிறது.

ஆனால் அடுத்தவன் பசியையே ஆயுதமாகவும், ஆயுதம் தாங்கிய போராளிகளின் கேடயமாகவும் பயன்படுத்தியவன் முகமது ஃபராக் அமிட்”.
கிழக்கு ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியைச் சேர்ந்த சோமாலியாவின் தலைநகரம், மகதீஷ்சு பகுதி. பசித்துயர் போக்க பணம் படைத்த நாடுகள் ஒன்று திரட்டி அனுப்பிய உணவுப்பொருட்கள், பொதுமக்களை சென்று சேரும் முன்னரே, இந்த முகமதுவின் ஆட்கள் அதனை கைப்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிலரை சுட்டுத்தள்ளி விடுகின்றனர். உணவுப்பொருள் வழங்கலைக் கண்கானித்து கொண்டிருந்த அமெரிக்க ஹெலிகாப்டரும் செய்வதறியாது திரும்பி விடுகின்றனர்.




அடுத்த கட்டமாக ’எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நின்றுவிடும்’ என்பதை போல, இவர்களின் ஆயுத விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, ஆயுதக்கும்பலின் தலைவன் கைது செய்யப்படுகிறான். ரொம்ப அநாவசியமான,அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பான் வில்லர்களின் தலைவன். அவனுடைய கைதை தொடர்ந்து அமெரிக்காவின் அதிரடிப்படை, ஒரு திட்டத்தை வகுக்கிறது. ஆறு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த படைச்சேகரிப்பு அமெரிக்காவின் முக்கிய போர் பிரிவான டெல்டா ஃபோர்ஸின் தலைமையிலும், நேட்டோ படைகளின் கூட்டு முயற்சியிலும் நடந்தது.

டெல்டா ஃபோர்ஸ் என்பது, அதிநவீன ஹெலிகாப்டர், எடை குறைந்த ஆனால் சக்தி வாய்ந்த ஆயுதங்களையும், மிகச்சிறப்பான் போர் வீரர்களையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பான படைப்பிரிவாகும்.

மொகதீஷ்சுவின் மக்கள் நெருக்கடி நிறைந்த கடைத்தெருவின் மத்தியில் அமைந்துள்ள ’ஒலிம்பியா’ என்ற கட்டிடத்தை தாக்கி அதில் உள்ள போராளிகளை கைப்பற்றுவதே இந்த ஆப்ரேஷன் ஐரேன்4 -ன்  நோக்கம். இதற்காக திட்டமிடப்பட்ட கால அவகாசம் 30 நிமிடங்கள் மட்டுமே. வான் வழியாக சூப்பர்6 என்று அழைக்கப்படும் ஹெலிகாப்டரில் சென்று நகரின் மத்தியில் உள்ள கட்டிடத்தை அனுகவதே இந்த திட்டம். முக்கியமாக, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இலக்கை சரியாக கைப்பற்றுவதே இதன் நோக்கம். டெல்டா ஃபோர்ஸின் வீரர்கள் இதற்கான சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். கால நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே என்பதால், இரவில் போர்புரியும் கருவிகள் மறுக்கப்படுகின்றன. மேலும், ஆப்ரேஷன் ஐரேன், மூன்று கட்டமான நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது. முதல் நிர்வாகி, இலகு ரக விமானம் ஒன்றில் அதிநவீன கேமராக்களால் போர்நடவடிக்கைகளை கண்காணிக்கிறது, இரண்டாவ்து நிர்வாகி, விமானத்திற்கும், Base Station- என்று அழைக்கப்படும் தரைக்கட்டுப்பாடு அலுவலகத்திற்கும் இணைப்பு பாலமாக செயல்படும்.


            
ஆண்டி என்ற முன்னாள் போராளி, உளவாளியாக பயன்படுத்தப்படுகிறான். இலக்கு தீர்மானிக்கப்பட்டதும், ஹெலிகாப்டரில் செல்லும், டெல்டா ஃபோர்ஸ் இலக்கை சுற்றி வளைக்கிறது.
அதிகபட்சம் 50 வீரர்கள் என்ற நிலையில் தீர்மானிக்கப்பட்ட படைப்பிரிவாக இலக்கு சுற்றி வளைக்கப்பட்டதும், தாக்குதல் துவங்கப்படுகிறது. பின்னர் தான், டெல்டா ஃபோர்ஸின் படை வீரர்களுக்கு, தங்களின் ஆபத்து விளங்குகிறது. டெல்டா தாக்குதலை துவங்கும் முன்பே, பொராளிகளின் தாக்குதலுக்கு தப்பிக்க முயற்சி செய்யும் ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழுந்த வீரர் படுகாயமடைகிறார். டெல்டா அனுமானித்ததை விட வலுவான ஆயுதங்கள் இவர்களிடம் இருப்பதும், பொதுமக்களே உளவாளிகளாக செயல்படுவதும் அப்போதுதான் தெரிய வருகிறது.

அடுத்தடுத்து நடக்கின்ற தாக்குதலில் , டெல்டா படைப்பிரிவின், முக்கிய ஹெலிகாப்டர்கள், சுட்டு வீழ்த்தப்படுகின்றன. இருப்பினும், திறம் வாய்ந்த டெல்டா ஃபோர்ஸ் கிழக்கு, வடக்கு பகுதிகளிலிருந்து முழுவேகத்துடன் சண்டையிட்டு சிலரை போர்கைதிகளாக பிடிக்கிறது. இதற்கிடையில், தரை வழிதாக்குதலில் சிலர் படுகாயமடைகின்றனர். மதியம் 2.30க்கு தொடங்கிய சண்டை எதிர்பார்த்த 30 நிமிடத்தில் முடியாமல், முற்றுகை போராக நீடிக்கின்ற நிலையில், டெல்டா ஃபோர்ஸின் தாக்குதலுக்கு மேலும் வலு சேர்க்க, தரைப்படையினர, அருகிலிருக்கும் Base Station-லிருந்து அனுப்பப்படுகின்றனர். ஆனாலும், போராளிகளின் கடுமையான தாக்குதலால், முக்கிய தளபதிகள் சிலர் கொல்லப்பட்டவுடன் பின்னடைவை சந்திக்கிறது. இந்நிலையில், மாலை மங்கிவிடவும், டெல்டா ஃபோர்ஸின் வேகம் குறைகிறது. தாக்குதலை விட உயிர்பிழைப்பது என்பதே முக்கியமாகி போய்விடுகிறது. ஆனால் இது எல்லையில் நடக்கும் சண்டை அல்ல செய் அல்லது செத்து மடி என்பதற்கு, தன்னையும் காத்து, buddy என்னும் தோழனையும் காப்பாற்றும், டிபன்ஸ் வகையைச் சார்ந்தது,

ஆதலால், விவேகமும், அளவுக்கதிகமான சகிப்புத்தன்மையும், தேவைப்படும் சண்டையாக இருக்கிறது. தாக்குதல் நடக்கும் இடத்திலிருந்து, காயம் பட்டவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவைக்கப்படுகின்றனர். அந்த வாகனமும், போராளிகளால், தாக்குதலுக்கு உள்ளாகும்போது, உயிர்ச்சேதம்,. 12 யை தாண்டுகிறது. போராளிகள் தரப்பிலும் ஏராளமான் இழப்பு.

சுடும் எல்லைக்கு வெளியே சுற்றும், ஹெலிகாப்டரின் வழிகாட்டுதலில், டெல்டா ஃபோர்ஸ் அங்கிருந்து வெளியேற முடிவு செய்கிறது. கச்ப்பான முடிவுதான், இருப்பினும், தளபதிகளின், உயிரின் முக்கியத்துவம் கருதி, வெளியேறும் முயற்சிக்கு உதவி வழங்கப்படுகிறது. குறுகிய பகுதிகளின் வழியாகவும், இடிபாடுகளின் வழியாகவும், தப்பிச்சென்ற படை Base Station-ஐ அடைகிறது. இருப்பினும், உயிர்சேதம் 19 ஐ தொடுகிறது. போராளிகள் தரப்பில் 1000.

இது ஒரு தோல்வி அடைந்த அமெரிக்க இரானுவ முயற்சி என்றே சொல்லலாம்.இதுவரை சொல்லப்பட்ட காட்சிகள் இடம்பெற்ற திரைப்படம், பிளாக் ஹாக் டவுன்(BLACK HAWK DOWN), என்ற அமெரிக்க திரைப்படமாகும். மிகச்சிறப்பான பிண்ணனி , மறு ஒலிப்பதிவு, அருமையான திரைக்கதை என்ற அளவில், கடந்த 10 ஆண்டுகளில் வெளியான மிகச்சிறந்த ஆக்‌ஷன் திரைப்படமாகக் கருதப்படுகிறது.

வசனங்கள் 90% போர் தொடர்பான வார்த்தைகளால் நிரப்ப பட்டிருந்தாலும், சில இடங்களில், ஆழமான கருத்தை சொல்லாமல் சொல்லிச்செல்கின்றன. குறிப்பாக ஆயுத வியாபாரி, தான் கைது செய்து அடைக்கப்பட்டிருக்கும்போது, அமெரிக்கத் தளபதியுடன் விவாதிக்கும் தருணங்கள்.அதேபோல், போரளிகளால் உயிருடன் சிறைபிடிக்கப்பட்ட தளபதி, தனக்கு அமெரிக்க அரசுடன் negotiate செய்வதற்கு அதிகாரம் இல்லை எனும்பொது, யுத்தகுழுவின் தலைவன், ”அப்படியானால், எங்களை கொலவதற்கு மட்டும் உரிமையும், உத்தரவும் வழங்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரம் இல்லையா?” என்று கேட்பது சற்று யோசிக்க வைக்கிறது.

படத்தின் இசை பெரும் பஙகளிப்பாகும். முக்கியமாக படத்தின் துவக்க நிமிடங்களில் வரும், பாடலும், அந்த இசையும் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.


அமெரிக்கா, அடுத்த நாட்டின் மீது படையெடுப்பு, போர் தந்திரங்கள், என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பார்த்தால், இது மிகச்சிறந்த திரைப்படமாகும். அரசியல் ரீதியான விவாதங்களுக்குள் செல்வதற்கு இன்னும் அதிக காலமாகும். மற்றபடி, போரும் அதன் விளைவும் இருமுனைக்கத்தி என்பதை மிக அழகாக காட்சிபடுத்தியுள்ள விதம் அருமை.


 இந்த திரைப்படத்தைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள 


   http://en.wikipedia.org/wiki/Black_Hawk_Down_(film)
      http://www.imdb.com/title/tt0265086/
      http://www.youtube.com/watch?v=AUJ6cxWdZwA

5 comments:

அகநாழிகை said...

சாமி, தெளிவான நடையில் நல்ல விமர்சனம். (அதுக்காக எங்களோட போட்டி போடக்கூடாது).
இன்னொரு விஷயம் மேலும் வாசிப்பதற்கான இணைப்புகளை கொடுத்தது. வாழ்த்துகள்.
(டிவிடியை நாளைக்கு வாங்கிக்கறேன்.)

- பொன்.வாசுதேவன்

shortfilmindia.com said...

மயில் ஹெலிகாப்டர் கீழே வீழ்ந்ததும் அவர்களை சுற்றி நடக்கும் அந்த துப்பாக்கி சண்டையும், எடிட்டிங்கும் மிக அருமையாய் இருக்கும். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

கேபிள் சங்கர்

மரா said...

@அகநாழிகை

வருகைக்கு ரொம்ப நன்றி..
//அதுக்காக எங்களோட போட்டி போடக்கூடாது//

புலியப் பாத்து சூடு போட்டுக்குற பூனை அடியேன்..

@கேபிள்
வாங்க தல...நீங்க சொன்ன இடம் அருமையா இருக்கும் படத்துல..இது அமெரிக்க ராணுவத்தின் ஒரு தோல்வி முயற்சி...மகிழ்ச்சி வருகைக்கு.

பாலா said...

பார்த்துப் பார்த்து.. மனப்பாடமே ஆய்டுச்சிங்க. இருந்தாலும்.. முழுப் பதிவையும் படிக்க வச்சது... நீங்க எழுதியிருக்கும்... இன்ஃபர்மேஷன் தான்!!! :)

அகநாழிகை சொன்ன மாதிரிதான். போட்டி போடாதீங்க. அப்புறம்... வர்ற 1-2 பேரும் எங்க ஏரியாவுக்கு வர மாட்டாங்க!

வேணும்னா.. கவிதை எழுதுங்க!! கேபிளுக்கு போட்டியா இருக்கும்! :)

மரா said...

@ ஹாலிவுட் பாலா

நன்றி இங்கிட்டு வந்ததுக்கு. நானெல்லாம் துக்கடா...உங்களை, பட்டர்ஃபிளையை,
ககாதலனை,கருந்தேளைப் பார்த்துட்டு எழுதிப் பழகுறேன்.
கவிதையெல்லாம் எழுத தனிப் பக்குவம் வேணும்னே.அதெல்லாம் கேபிள் மாதிரி யூத் சமாச்சாரம்னு நெனைக்கிறேன்.